கூரியர் தொழில் மூலம் நாங்கள் இந்த தேசத்தில் எதை விரும்புகிறோம்?..

14656385_1508218915871288_2524668888534716613_nவாழ்வில் போதும்,போதுமென்கிற அளவிற்கு பொருளீட்ட வேண்டும் அதன் மூலம் புகழ் பெற வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதருக்குமே இருக்கிறது.. இதில் தொழில் செய்யும் ஒவ்வொருவருக்கும் இது சற்று கூடுதலாகவே இருப்பது இயல்பு..
இன்று தமிழன் இல்லாத தேசம் உலகில் இல்லை என்றால் அது மிகை இல்லை..உலகத்தின் பல நாடுகளில் தமிழ் ஆட்சி மொழி என்கிற அங்கீகாரத்தை பெற்று உள்ளது என்றால் அது வெறும் புலம்பெயர்ந்து தோட்ட வேலையும்,கட்டிடம் கட்டும் உதவியாளர்களாலும் வந்தததா?இல்லை ஒரு போதும் இல்லை..
தமிழன் பல தொழில்களின் அதிபனாகவும்,பொருளாதாரத்தில் மிகைத்தவனாகவும்,ஆட்சி,அதிகாரங்களில் வலிமை மிக்கவனாகவும் இருந்தான் என்பதன் அடையாளமே..இந்த உலக அரங்கில் நமக்கு கிடைத்த அங்கீகாரம்..“திரைகடலோடியும்,திரவியம் தேடு”என்பதன் பொருள் கடந்தும் கூட பணம் ஈட்டு என்கிற அற்த்தமில்லை இங்கே பயன்படும் பதம் திரவியம் என்பது மிகைபொருள்,சொத்து அல்லது அதிகமான பொருள் என பொருள்படுகிறது..
இதன் மூலம் நமது மூதாதையர் சொல்லவிரும்பிய செய்தி என்னவெனில் பொருளீட்ட ஆசைப்படு ஆனால் அது பல நாடுகளில் நடை பெரும் வானிபத்தை ஒருங்கிணைப்பதன் மூலமே நடக்கும் என்கிற பொருள் படும் வகையில் சொல்லியிருக்கின்றனர்..இந்த கருத்து முரணான கருத்தாக இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் நமது தேசம் அந்நிய செலாவணி என்று அழைக்க கூடிய அயல் நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற வருமாணமே அதிக இலாபம் தரக்கூடியதாக இருக்கிறது என்கிறது 239இலட்சத்து79ஆயிரம் கோடி ரூபாய்($36000கோடி) கடந்த நிதியாண்டிலிருந்து மட்டும் நமது அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி கணக்கிட்டு செய்தி வெளியிடுகிறது என்றால் இந்த அந்நிய செலாவணியின் வலிமை எத்தகையது என்பதை நம்மால் யூகிக்க இயலும்..

13891801_1428803760479471_6560332026043632766_n
இந்த அந்நிய செலாவணி க்கும் நமது கூரியர் மற்றும் கார்கோ தொழிலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதுதான் நம் அனைவரது கேள்வியாகவும் இருக்கும்!
மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது இந்த அந்நிய செலாவணி என்பது என்ன என்றால் நமது நாணயத்தை வேறு ஒரு நாட்டின் நாணயமாக மாற்றுவது உதாரணமாக ₹65=$1 என்பது போது இது எதற்காக மாற்றபடுகிறது?
இதில் 85 சதவீதம் அயல் நாடுகளில் நாம் செய்யும் தொழில்களை சார்ந்ததே அது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என்றும் கூட வகைபடுத்த இயலும்..இவை வெறும் அரசுக்கு கணக்கில் காட்டபட்ட பணம் மட்டுமே என்பதை நினைவில் கொள்க.. இத்தனை பெரிய வெளிநாட்டு சந்தையை நாம் சார்ந்திருக்கும் தொழிலை மையமாக வைத்தே நடத்தபடுகிறது என்பது எத்தனைபேருக்கு தெரியும்?
2016-17ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் இந்தியாவின் முக்கியத் துறைமுகத்தில் கார்கோ வர்த்தகம் 5.1 சதவீதம் உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் 315.4 மில்லியன் டன் சரக்கு வர்த்தகத்தம் செய்யப்பட்டுள்ளது, கடந்த நிதியாண்டில் இதன் அளவு 299.5 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கோவா முர்மோகோவ் துறைமுகத்தில் மட்டும் வர்த்தகம் சுமார் 61 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பரதீப் துறைமுகத்தில் 18.3 சதவீத உயர்வும், விசாகப்பட்டினம் 11 சதவீதம், கொச்சி 5.2 சதவீதம், வி.வோ.சிதம்பரநார் 3.5 சதவீதம், புதிய மங்களுரூ 3.4 சதவீதம், சென்னை துறைமுகத்தில் 0.3 சதவீதம் அளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது.

கடந்த 2 வருடமாக இந்தியாவில் கார்கோ வர்த்தகம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Kandla துறைமுகத்தில் மட்டும் இக்காலகட்டத்தில் சுமார் 53.9 பில்லியன் டன் சரக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை விடவும் 17.1 சதவீதம் அதிகமாகும்.நாம் ஏன் சர்க்குகளை கையாளும் கார்கோ சேவைகளுக்கு முக்கியத்துவம் தருகிறோம்?
உலகலாவிய சந்தைகளையும் அதில் நமது பங்குகளையும் பற்றி பார்த்தோம் பொதுவாக தொழிலில் வெற்றி என்பது மூன்று வகையான செயல்களின் மூலம் சாத்தியப்படுகிறது..
1.சந்தை வளங்களை அலசுதல்(Market analyzing)
2.சந்தையில் நமக்கான அடையாளத்தை உருவாக்குவயற்கான திட்டமிடல்(Planing and Branding)
3.நடைமுறைபடுத்துதல்(Executions)
ஆகிய முறையான செயல்களின் மூலம் இவை சாத்தியப்படுகிறது,அதனடிப்படையில் ஒவ்வொன்றாய் அலசுவோம்..
1.சந்தை வளங்களை அலசுதல்:இதுவே உலகின் மிகப்பெரிய மற்றும் அழிவே இல்லாத தொழிலாக கருதப்படுகிறது. மேலே பார்த்த வளங்களின் அடிப்படையில் வெளிநாட்டு சந்தை மற்றும் உள்நாட்டு சந்தை என இரு வகையாக இதை பிரிக்கலாம் நம்மை பொறுத்தவரை இந்த இரண்டு வகையான சந்தைகளையுமே மிக தெளிவாக அலச வேண்டியது இந்த தொழிலை நம்பியிருக்கும் நம் ஒவ்வொருவரின் கடமை அதனடிப்படையில் அயல்நாட்டு வர்த்தகம் குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்.. ஆனாலும் அதை எதன் அடிப்படையில் நாம் பங்கு வகிக்கபோகிறோம் என்கிற கேள்வி நமக்கு எழுகிறது.. அயல் நாட்டு வர்த்தகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இந்தியாவின் ஒவ்வொரு ஊரிலிருந்தும்,பகுதிகளிலிருந்தும் பல்வேறு வகையான உற்பத்தி பொருட்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது எந்த பகுதியிலிருந்து என்ன ஏற்றுமதியாகிறது அதில் நமது நான்ஸ்டாப் கூரியர் மற்றும் கார்கோவின் மூலம் நாம் அனுப்பி வைக்க எதுபோன்ற சேவைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை அறிவது அவசியமாகும்..
கவரையும் பார்சலையும் மட்டுமே நமது போட்டி நிறுவணங்கள் தூக்கி பிடித்து கொண்டிருக்கும் போது 16 வகையான சேவைகளை நாம் சந்தையில் அறிமுகபடுத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது என்பன போன்ற கேள்விகளுக்கும் இதன்மூலம் விடை கிடைக்க கூடும்,ஆம் இதுபோன்ற அந்நிய நாடுகளின் மூலம் செய்யப்படும் தொழில்களுக்கு என்றே பிரத்யோகமாக மூன்று வகையான பெயர்கொண்ட சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். Air Cargo(விமான சரக்கு சேவை) :இதன் மூலம் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் உற்பத்தியாகும் பொருட்களை மிக விரைவாக ஏற்றுதி மற்றும் இறக்குமதி செய்யபயன் படுத்தபடுகிறது.. இதற்காக உலகிலுள்ள அனைத்து நாடுகளின் விமான சேவைகள் வழங்கும் நிறுவனங்களோடும் ஒப்பந்தம் ஏற்படுத்தி வர்த்தகம் செய்யபடுகிறது.சமீபத்தில் ஏர்-எசியா மற்றும் எமிரேட்ஸ் ஆகிய நிறுவணங்களோடு ஒப்பந்தமிட்டது குறிப்பிடதக்கது.ஒரு கிலோ முதல் 10000கிலோ வரையிலும் தற்போது இதன்மூலம் செய்துவருகிறொம் என்பது குறிப்பிடதக்கது
Sea cargo(கடல்வழி சரக்கு சேவை)
இந்த வகை சேவையில் மட்டுமே பெரும்பாலான வர்த்தகங்கள் நடைபெறுகிறது.. இது பொதுவாக இரண்டு வகையான முறைகளில் நாம் செய்து வருகிறோம்..1.FCL என்று அழைக்கபடக்கூடிய ஃபுல் கண்டெய்னர் லோடு 12734037_1293158427377339_4866572955324763616_n2.LCL என்று அழைக்கபடக்கூடிய லூஸ் கண்டெய்னர் லோடு
இவை 20″ மற்றும் 40″ என்கிற இரண்டு அளவுள்ள கண்டெய்னர்கள் மூலம் இதை செய்துவருகிறோம் இதைபற்றியும் இன்னும் விரிவாக எழுதலாம் ஆனால் நோக்கம் எளிதாக சொல்லபடவேண்டும் என்கிற காரணத்தால் விட்டதை தொடருவோம் ஆக கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை­யி­லான ஆறு மாதங்­களில், வெளி­நா­டு­க­ளுக்­கான சரக்கு பெட்­ட­கங்­களை கையாண்­டதில், இந்­தியா, 11 சத­வீதம் வளர்ச்சி கண்­டுள்­ளது; இதே காலத்தில், சர்­வ­தேச சரக்கு பெட்­டக போக்­கு­வ­ரத்து வளர்ச்சி, கடந்த ஆண்டைப் போன்றே, 2.8 சத­வீ­த­மாக, மாறு­த­லின்றி உள்­ளது’ என, மார்ஸ்க் லைன் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
அதன் விபரம்: அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய நாடுகள், பொரு­ளா­தார மந்­த­நி­லையில் இருந்து மெல்ல மீளத் துவங்­கி­யுள்­ளன. இதனால், அந்­நா­டு­க­ளுக்கு, இந்­தியா கையாளும் சரக்கு பெட்­ட­கங்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்து வரு­கி­றது. உள்­நாட்டு துறை­மு­கங்­களில் சரக்கு பெட்­ட­கங்­களை கையாள்­வதில், மும்­பையில் உள்ள, ஜவ­ஹர்லால் நேரு துறை­முகம், 55 சத­வீத பங்­க­ளிப்­புடன் முத­லி­டத்தில் உள்­ளது.
கடந்த, 1989 மே முதல் செயல்­பட்டு வரும் இத்­து­றை­முகம், முதன்முறை­யாக, 2015 – 16ம் நிதி­யாண்டில், தலா, 20 அடி நீளம், 8 அடி உயரம், 8.6 அடி அகலம் உள்ள, 44.90 லட்சம் சரக்கு பெட்­ட­கங்­களை கையாண்டு, சாதனை படைத்­துள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்டில், 44.70 லட்­ச­மாக இருந்­தது. இத்­து­றை­முகம், வரும், 2022 – 23ம் நிதி­யாண்டில், 1 கோடி சரக்கு பெட்­ட­கங்­களை கையாள இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.சரக்­கு­களை பெட்­ட­கத்தில் அடைத்து ஏற்­று­மதி செய்­வ­திலும், இறக்­கு­மதி செய்­வ­திலும், இந்­தி­யாவின் வளர்ச்சி வாய்ப்பு பிர­கா­ச­மாக உள்­ளது.
‘உல­க­ளவில் இந்­தியா, தொடர்ந்து வேக­மான பொரு­ளா­தார வளர்ச்­சியை கண்டு வரு­கி­றது’ என, பன்­னாட்டு நிதியம் பாராட்டி உள்­ளது. இந்­தி­யாவின் சரக்கு பெட்­டக போக்­கு­வ­ரத்தில், வட அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள், 33 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான பங்­க­ளிப்பை கொண்­டுள்­ளன. அதனால், அந்­நா­டு­களின் எழுச்சி, இந்­தி­யாவின் வளர்ச்­சிக்கு உதவும்.இந்­தாண்டு, இந்­தி­யாவின் ஏற்­று­ம­தியில் அமெ­ரிக்கா, பிரிட்டன், ஜெர்­மனி, சவூதி அரே­பியா, துருக்கி, கென்யா ஆகிய நாடுகள் முன்­னிலை வகிக்­கின்­றன.
ஏற்­று­ம­தியில், அளவின் அடிப்­ப­டையில் காய்­க­றிகள், 56 சத­வீதம்; பழங்கள் மற்றும் கொட்டை வகைகள், 42 சத­வீதம்; திராட்சை, 180 சத­வீதம் மற்றும் ஆடைகள் பிரிவு, 13 சத­வீத வளர்ச்சி கண்­டுள்­ளன. வாகனத் துறை ஏற்­று­மதி, 9 சத­வீதம் அதி­க­ரித்துள்­ளது. புதிய சந்­தை­களும், நாட்டின் ஏற்­று­மதி வளர்ச்­சிக்கு துணை புரிந்து வரு­கின்­றன. நடப்­பாண்டு, இந்­தி­யாவின் வர்த்­தகம், சர்­வ­தேச வர்த்­த­கத்தை விட, நான்கு மடங்கு வளர்ச்சி கண்டு, 8 – 9 சத­வீ­த­மாக இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
இந்­தி­யாவின் இறக்­கு­ம­தியில் சீனா, அமெ­ரிக்கா, ஜெர்­மனி, தென்­கொ­ரியா, சவுதி அரே­பியா ஆகி­யவை முன்­ன­ணியில் உள்­ளன. மொத்த இறக்­கு­ம­தியில், சீனாவின் பங்­க­ளிப்பு, 30 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக உள்­ளது. அதில், மின்­னணு பொருட்கள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன.
3.Special care Expert(அதிக கவனத்தோடு செய்யப்படும் சரக்கு சேவை):இந்த சேவையின் மூலம் குறிப்பிட்ட கால்க்கெடுவுக்குள் சேர்க்கபட வேண்டிய பொருட்களை துரிதமாகவும் தேவை எனில் ஃப்ரீஸர் கண்டெய்ணர்களின் உதவி கொண்டும் சேர்க்கபடுகிறது..14910283_1528205853872594_7514935608841587831_n
ஆக வெளிநாட்டு சரக்கு சந்தை என்பதை நாம் அடைவதற்கு தெளிவான திட்டமிடலின் அடிப்படையில்தான் நாம் இந்த தொழிலில் கால்பதித்திருக்கிறோம் என்பது முக்கியமான செய்தி..அதன் பிறகு உள்நாட்டு வர்த்தகத்தில் சந்தையின் மதிப்பு என்ன அது எதனடிப்படையில் நடை பெறுகிறது என்பதையும் விரிவாக பார்ப்போம்
உள்நாட்டு வர்த்தகத்தில் நாம் இரண்டு வர்த்தகமுறைகளை மனதில் வைத்த்தே நாம் இந்த துறையில் அடி எடுத்து வைத்திருக்கிறோம்.
1.சில்லரை வனிகம்/வர்த்தகம்
2. ஆன்லைன் வர்த்தகம்/வனிகம்
இந்த இரண்டு சந்தைகளுமே நமக்கான சந்தைதான்..

1.சில்லரை வர்த்தகம்(Retail Business)
லாரிகள் ஓடததால் சரக்குகள் தேக்கம் என உத்பத்தியாளர்கள் புரத்திலும் சரக்குகள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என வாடிக்கையாளர் தரப்பிலும் வெளியிடப்படும் செய்திகளை அவ்வப்போது படித்தும்,பார்த்தும் இருப்பீர்கள் இதிலிருந்தே நாம் நமது தேவைகள் சமூகத்தில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது என்பதை மிக எளிதாக அறியமுடியும்.
எளிதாக சொல்ல வேண்டும் எனில் நாம் இல்லாத இந்தியாவும் அதன் வளர்ச்சியும் கேள்விகுறியே..ஆனால் நாம் இந்த விசயங்களில் ஒழுங்குபடுத்த வேண்டிய விசயங்கள் ஏராளம் உண்டு என்பதை அறிவது அவசியம்..சரி இதில் நமது நான்ஸ்டாப் கூரியர் மற்றும் கார்கோஎந்த வகையில் உள்ளே வந்திருக்கிறத்உ என்கிற கேள்வி அனைவரது மனதிலும் எழுவது இயற்கையே..
(I).காம்பெடிட்டிவ் மோட் கார்கோ(போட்டியாளர்களின் அடிப்படையில் விலை மற்றும் சேவை நிர்ணயம் செய்யும் கார்கோ சேவை)
இந்த சேவையின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தின் சரக்குகளை கையாளும் தகுதியை நம்மால் பெற இயலும் என்றால் அது மிகை இல்லை,ஒரு தொழில் நடத்துபவர் இரண்டு நன்மைகளுக்காக ஒரு லாரி சர்வீசை அனுகுகிறார் ஒன்று சேவை விலை மற்றொன்று விரைவான டோர் டெலிவரி ஆக இந்த இரண்டிற்காக மட்டுமே இந்த சேவை வடிவமைக்கபட்டுள்ளது.இந்த சேவையை பொருத்தமட்டில் எந்த விலைக்கு வேண்டுமானாலும் எடுக்கலாம் குறிப்பிட்ட கால அவகாசத்தில் சரக்கை டெலிவரியும் கொடுக்கலாம் என்கிற அடிப்படையில் இந்த் சேவை செயல்பட்டுகொண்டிருக்கிறது..ஆகவே இதனடிப்படையில் ஒட்டுமொத்த இந்தியாவின் சில்லரைவர்த்தகத்தின் சேவைகளிலும் நமது பங்கு உண்டு என்பது யாராலும் மறுக்க இயலாதது. இந்திய சில்லரை வர்த்தகம் ரூ. 75 லட்சம் கோடியை எட்டும்

இந்திய சில்லரை வர்த்தகத் துறை அடுத்த எட்டு ஆண்டுகளில் ரூ. 75 லட்சம் கோடியை எட்டும் என்று இந்திய வர்த்தக சபைகளின் சம்மேள னம் (ஃபிக்கி) நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.

டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப் பட்டது இந்த ஆய்வு. தற்போதுள்ள சில்லறை வர்த்தகத்தில் நவீன முறைகளில் செயல்படும் வர்த்தகத்தின் அளவு அய்ந்து சதவீதம் மட்டுமே உள்ளது. அடுத்த எட்டு ஆண்டுகளில் இதன் மதிப்பு சுமார் ரூ. 12 லட்சம் கோடியாக உயர வாய்ப்புள்ளது.

இந்திய வர்த்தகம் வரும் 2020ஆம் ஆண்டுக்குள் பன்மடங்கு அதிகரிக்கப் போகிறது என்று இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தின் மதிப்பு சுமார் ரூ. 75 லட்சம் கோடியைத் தொடடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி சாத்தியக்கூறை வர்த்தகர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வழக்கமான விற்பனைக் கூடங்கள் மட்டும் போதாது. ரியல் எஸ்டேட் விலை கடுமையாக உயர்ந்து வருவது விற்பனையாளர்களை ஏற்கெனவே மிகவும் பாதித்துள்ளது. தங்களின் வருவாயில் பத்து சதவீதம் முதல் 15 சதவீதம் வரையில் வாடகைக்கே தர வேண்டியுள்ளது. எனவே டிஜிட்டல் முறை, மொபைல் முறை ஆகியவற்றையும் சில்லறை விற்பனையாளர்கள் கைக்கொள்ள வேண்டும்.

2020ஆம் ஆண்டுக்குள் அய்ந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் எண்ணிக்கை 200 ஆக இருக்கும். இதுவும் சில்லறை விற்பனைத் துறையை பெரும் அளவில் அதிகரிக்கச் செய்யப் போகிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.எனவே சில்லரை வர்த்தகங்களில் 3லிருந்து 10சதவீதம் வரை சரக்கு கையாளுதலுக்காக ஒதுக்கபடுகிறது எனில் நமக்கான சந்தை மதிப்பை நாம் உணரும் தருணத்தில் இருக்கிறோமா என்பதை எண்னி பார்க்கவேண்டும்.

2.ஆன்லைன் வர்த்தகம்(ecom business)
ஆன்லைன் வர்த்தகத்தில் நாம் சொல்லித்தான் அதை பற்றி நீங்கள் அறியவேண்டிய அவசியம் இல்லை என்பதை நாம் அறிவோம் ஆனாலும் நமது பங்களிப்பை சொல்லவேண்டியது நிர்வாக இயக்குநர் என்பதன் அடிப்படையில் எனது கடமையல்லவா?

பண்டிகைக் காலம் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் அக்டோபர் தொடங்கி ஜனவரி வரையிலான நான்கு மாதங்களில் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசை கட்டி வரும் பண்டிகை நாட்களை கிட்டத்தட்ட இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் கொண்டாடுகின்றன. ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் இந்த கொண்டாட்ட தினங்களில் தங்களை இணைத்துக் கொள்கின்றன. இந்த பண்டிகை நாட்கள்தான் பல வியாபார நிறுவனங்களுக்கு, சிறு உற்பத்தியாளர்களுக்கு வாழ்வாதார நாட்கள். இந்த நாட்களில் நமது உள்ளூர் சந்தைகளில் நடக்கும் வர்த்தகமும், பணப்புழக்கமும் ஒரு தொழில் இன்னொரு தொழிலை சார்ந்த பிணைப்பு சங்கிலியால் ஆனது. இந்திய பொருளாதாரத்தின் அடித்தளமும் அதுதான்.

ஆனால் இந்த ஆண்டின் பண்டிகை நாட்களில் உள்ளூர் சந்தைகளின் வர்த்தகம் கடுமையாக குறைந்துள்ளது. பல சிறு விற்பனையாளர்கள் விற்பனை குறைந்துள்ளதாக கூறுகின்றனர். முன்பைவிட பணப்புழக்கம் குறைந்துள்ளது என்றும் வருத்தப்படுகின்றனர். இந்த வர்த்தக பின்னடைவுக்கு பின்னால் இ-காமர்ஸ் நிறுவனங்களை கைகாட்டுகின்றனர். அது உண்மையும்கூட.

வழக்கத்தைவிட இந்த பண்டிகைக் காலத்தில் சகட்டுமேனி விளம்பரங்கள், சலுகைகள் மூலம் இறங்கி அடித்திருக்கின்றன இ-காமர்ஸ் நிறுவனங்கள். சமீபத்தில் நிதியமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்த இந்திய சில்லரை வர்த்தகர்களின் கூட்டமைப்பு இகாமர்ஸ் நிறுவனங்களின் மீது அதிருப்தியை தெரிவித்துள்ளன. குறிப்பாக இந்திய சில்லரை வர்த்தகத் துறையில் முக்கிய பெரிய குழுமமான பியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியானி, சில்லரை வர்த்தகத் துறையின் அடித்தளத்தை, குறிப்பாக முறைப்படுத்தப்பட்ட நேரடி சில்லரை வர்த்தகம் இடெயில் நிறுவனங்களால் பாதிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிரடியாக சலுகைகளை தள்ளுபடிகளை அறிவித்து விளம்பரங்களை வெளியிடுகின்றனர். இந்த விதிமுறைகளை மீறிய விளம்பரங்களால் நேரடி சில்லரை வர்த்தகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று இந்திய அனைத்து வர்த்தகர்களின் கூட்டமைப்பும் கூறியுள்ளது.

100 சதவீத எப்டிஐ

இந்த ஆண்டு தொடக்கத்தில் இ-காமர்ஸ் சில்லரை வர்த்தகத் துறையில் 100 சதவீதம் நேரடியான அந்நிய முதலீட்டை திரட்டிக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கான விதிமுறைகளில் முக்கியமானது இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களது மொத்த விற்பனையில் 25 சதவீதத்துக்கும் அதிகமாக ஒரே விற்பனையாளரையோ அல்லது அவரது குழுமம் சார்ந்த நிறுவனத்துக்காகவோ இருக்கக்கூடாது.

இந்த முக்கியமான கட்டுப்பாட்டுக்கு ஏற்ப இந்தியா முழுவதும் பல உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கு ஆன்லைன் சந்தையில் தளத்தை அமைத்து கொடுத்துள்ளன இந்த நிறுவனங்கள். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட்ட நேரடி சில்லரை வர்த்தக சந்தையை பிடிப்பதற்கு அவர்கள் வழங்கும் தள்ளுபடிகள், சலுகைகள் மட்டுமே காரணமல்ல; வாடிக்கையாளர்களின் தேர்வும் சுதந்திரமும், நுகர்வு அனுபவத்தையும் கொடுக்க முனைப்பு காட்டுகின்றன. அதனடிப்படையில் இந்தியா முழுவதிலிருந்தும் உற்பத்தியாளர்கள் மற்றும் தயாரிப்புகளை ஒருங்கிணைக்கின்றன. முக்கியமாக ஒரே இடத்தில் வாடிக்கையாளர்களுக்கான பல்வேறு வாய்ப்புகளை வழங்குகின்றன.

10 கோடி வாடிக்கையாளர்கள்

12650921_1278803552146160_7168301564236359197_nசமீபத்திய புள்ளிவிவரங்கள்படி இந்தியாவில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனங்கள் 10 கோடி வாடிக்கையாளர்கள் என்கிற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. பிளிப்கார்ட் இந்த அளவை எட்டிவிட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த போட்டியில் அமேசான், ஸ்நாப்டீல் ஷாப்குளூஸ், இபே, ஜபாங்,நாண்ஸ்டாப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாடிக்கையாளர்கள் யாவரும் நேரடி சில்லரை வர்த்தகத்தின் வாடிக்கையாளர்கள் என்பது நமக்கு தெரிந்ததே. இதற்கிடையில் பிளிப்கார்ட் நேரடி விற்பனையிலும் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஆன்லைன் மூலமான விற்பனை அதிகரித்துள்ளதும் கவனிக்க வேண்டும். 2011 டிசம்பர் முதல் 2015 டிசம்பர் வரையிலான காலத்தில் இந்த துறையின் வளர்ச்சி 30 சதவீதம்தான். ஆனால் 2015 டிசம்பருக்கு பிறகு இதன் வளர்ச்சி 65 சதவீதமாக உள்ளது. டிசம்பர் 2015ல் ரூ.1,25,732 கோடியாக இருந்த ஆன்லைன் சந்தை மதிப்பு, 2016 டிசம்பருக்குள் ரூ.2,11,005 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்திய அளவில் முக்கிய எட்டு பெரு நகரங்களிலும் உள்ள 16 முதல் 34 வயது இடையிலான பிரிவினரில் பெருன்பான்மையானவர்கள் ஆன்லைன் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை என நான்கு நகரங்களில் 26 சதவீதம் பேரும், இதர நகரங்களில் இருந்து 29 சதவீதமும், சிறு நகரங்களில் 16 சதவீதம் பேரும் ஆன்லைன் சந்தைகளில் பொருட்களை வாங்கி வருகின்றனர் என்கிறது ஆய்வுகள். முறைப்படுத்தபட்ட நேரடி சில்லரை வர்த்தக தொழிலின் 25 சதவீத சந்தையை 2020-ம் ஆண்டுக்குள் ஆன்லைன் நிறுவனங்கள் பிடித்துவிடும் என்கிறது கூகுள் மற்றும் ஏடி கிரானே நடத்திய ஆய்வு.

கேஷ் ஆன் டெலிவரி

பல ஆன்லைன் நிறுவனங்கள் ‘கேஷ் ஆன் டெலிவரி’ வாய்ப்பை வழங்குகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு எல்லை யில்லா சுதந்திரத்தை வழங்கியுள்ளது. ஒரு பொருளை பல ஆன்லைன் சந்தைகளில் ஒப்பிட்டுப்பார்த்து வாங்கவும், கையில் பணம் இல்லையென்றாலும் அவற்றை வாங்கும் வாய்ப்பையும் வழங்குகின்றன. ஆரம்பத்தில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை மட்டுமே ஏற்றுக் கொண்ட ஆன்லைன் சந்தையில் இப்போது கேஷ் ஆன் டெலிவரி 76 சதவீதமாக உள்ளது. கிரெடிட், டெபிட் கார்டுகளின் சதவீதம் இப்போது 10 சதவீதத்துக்குள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இண்டர்நெட்

120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் சுமார் 35 கோடி மக்களிடம் இணைய தொடர்பு உள்ளது. அதில் 13 கோடி மக்கள் சமூக வலைதளங்களில் தொடர்பில் உள்ளனர். சுமார் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்துகின்றனர். அதில் சுமார் 10 கோடி பேர் சமூக வலைதளங்களில் துடிப்பாக இருக்கின்றார் என்று 2015ல் ஒரு ஆய்வு தெரிவித்தது. 120 கோடி மக்கள் கொண்ட மாபெரும் சந்தையாக இருந்தாலும், 20க்கும் மேற்பட்ட மொழிகள் கொண்ட சிக்கலான பண்பாடு, பிராந்திய பழக்கங்களை கொண்டதாக இருந்தாலும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வெற்றி பெறுவதற்கு இதுவும் காரணம்.

முறைப்படுத்தப்பட்ட நேரடி சில்லரை வர்த்தக நிறுவனங்கள் தங்களது உத்தியை மாற்ற வேண்டிய நேரம் இது. வர்த்தகத்தில் தாக்கம் செலுத்துகின்றன என்று இ-டெயில் நிறுவனங்களை குறைகூறிக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் ஆன்லைன் கடைகள் வெற்றி பெறுவதற்கு சலுகைகள் மட்டுமே காரணமல்ல; மக்களின் மாறிக் கொண்டிருக்கும் மனநிலை, தொழில்நுட்பம் போன்றவையும் காரணமாக உள்ளன.

சில்லரை வர்த்தகம் மற்றும் இகாமர்ஸ் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியினால் நேரடி சில்லரை வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என்பதுதான் இந்த துறையினரின் வருத்தம். உண்மையில்லாமலும் இல்லை. இந்த பண்டிகைக்காலம் அதை தீவிரமாக உணர்த்தியுள்ளது. இடெயில் நிறுவனங்கள் மற்றும் நேரடி சில்லரை வர்த்தக தொழிலுக்கு இடையில் சீரான வர்த்தகத்தை நிலைநாட்டும் கொள்கை கள் உடனடியாக வகுக்கப்பட வேண்டி யது அவசியம் என்பதையும் இந்த பண்டிகைக் காலம் உணர்த்தியுள்ளது.
இந்த சந்தை மதிப்பில் 7லிருந்து 15சதவீதம் வரை நமக்கான சந்தை இதில் உள்ளது.
ஆன்லைன் எக்ஸ்பர்ட் என்று அழைக்கபடுகின்ற சரக்கு சேவையின் மூலம் கேஷ் 13346930_1385834094776438_5929905654654466814_nஆன் டெலிவரி வசதி ஈ-ஸ்வைப்/ஆன்கோ மூலம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் இந்தியாவிலேயே ஒரு கூரியர் நிறுவணம் பொருளுக்கான பணத்தை வசூலிக்கிறது எனில் அது நமது நான்ஸ்டாப் மட்டுமே என்றால் அது மிகைபடுத்த பட்ட விசயமா என்ன?
ஆக மிகத்துல்லியமாக சந்தயை கணித்த பின்பே நிறுவனம் கால்பதித்திருக்கிறது.

2.சந்தையில் நமக்கான அடையாளத்தை உருவாக்குதல்:

nonstop dvd

“இனிமே இதுதான் இதுமட்டும்தான்” என தமிழில் ஆரம்பித்து “ஆஜ்கல் யஹிஹே யஹி பஸ் யஹிஹே” என ஹிந்தி வரை இந்தியாவின் ஆறு ஆட்சி மொழிகளில் இந்த பாடல் பிரபலம்.. இந்த பாடலில் பயன்படுத்தப்படும் பதங்கள் வெறும் வெற்று வார்த்தைகள் அல்ல அவை ஒவ்வொன்றும் வியாபார திட்டத்தை வெற்றியாக மாற்ற உருவாக்கப்பட்ட மந்திரச்சொற்கள் அந்த மந்திரசொல்லின் எதிர்வினைகள் தெரிந்துதான் அவைகளை உருவாக்கினேன்..ஏற்கனவே பல நிறுவனங்கள் சந்தையில் இருக்கும்பொழுது நேற்று பெய்த மழையில் இன்னைக்கு மொளைச்ச காளான் இப்படி ஒரு அரைகூவலை விடுப்பது எதிர்வினையை உண்டாக்காமல் இருக்குமா என்ன,இந்த எதிர்வினைகளும் நம்மால் முன்கூட்டியே கணிக்கபட்டதே.. அந்த ஜிங்கில்(பாடல்)மூலம் இந்தியாவில் குழந்தைகளை கூட முனுமுனுக்க செய்தோம் என்றால் மிகை இல்லை..இணைய ஊடகம்,ஒலி,ஒளி ஊடகம் மற்றும் அச்சு ஊடகம் என நமது பிராண்டை தூக்கிப்பிடித்தன..இது குறித்த பல நாளிதழ்கள்,வார இதழ்கள் மற்றும் மாத இதழ்கள் பல நம்பிக்கையூட்டும் செய்தியும் வெளியிட்டன.
அப்படி ஒரு அசைக்கமுடியாத யாராலும் நெருங்கமுடியாத உயரத்தில் நமது பிராண்டின் இமேஜ் வைக்கபட்டது..ஆக திட்டமிட்டபடி இரண்டாவதான நிலையும் நலமாய் முடிக்கபட்டது.

3.நடைமுறைபடுத்துதல்(execution)
இதில் மட்டுமே கொஞ்சம் காலதாமதமாகிறது..இந்திய வரலாற்றில் ஒரே ஒரு தேசிய தொழிலதிபரை காட்டுங்கள் பார்ப்போம்.
முடியாது அதன் காரணம் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஒரு நண்டுகதையை அடிக்கடி பல மேடைகளில் பேசுவார் அனைத்து மானிலங்களை சார்ந்த நண்டுகளையும் ஜோடிகளாக ஒரு ஆழமான பாத்திரத்தில் போட்டார்களாம், யார் முதலில் மேலே வருவது என்பதுதான் அந்த போட்டி அனைத்து மாநில நண்டுகளும் மேலே வந்ததாம் இறுதி வரை தமிழகத்தை சார்ந்த இரண்டு நண்டுகள் மட்டும் மேலே வரவே இல்லையாம்.. சரி என்று நீதிபதிகள் அருகே சென்று பார்க்கும்போது இரண்டு நண்டுகளுமே செத்துகிடந்ததாம் ஏன் என ஆய்வு செய்யும்போது ஏறும் ஒன்றை மற்றொன்று மிக வேகமாக கீழே இழுத்து விடுமாம் இப்படியே இறுதிவரை நடந்து இறுதியில் இரண்டுமே இறந்து போனதாம்.இந்த கதை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நமது ஃபிரான்சிகளுக்கு பக்காவாக பொருந்தும் என்பதை பல நிகழ்வுகள் உணர்த்தியது..ஒருவர் தொழில் எடுப்போம் என்றால் இன்னொருவர் அவரை தொடர்புகொண்டு எடுக்காதீர்கள் என்பது நானும் தொழில் செய்ய மாட்டேன் மற்றவர்களையும் தொழில் செய்ய விடமாட்டேன் என்றால் நடைமுறைபடுத்துதல் எப்படி சாத்தியம்?
இதில் கொடுமை என்ன்வெனில் யார் நிறுவணம் போல செயல்பட வேண்டும் என விரும்பி நியமித்தோமோ அந்த ஹப்புகளே எதிர்மறை கருத்துக்களை விதைப்பதுதான்.ஆனாலும் அவை எதையும் பொருட் படுத்தாமல் தொழில் செய்பவர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.இலாபம் ஈட்டி கொண்டுதானிருக்கிறார்கள்.அதற்கான கால அவகாசமும் வழங்கபட்டது அதன் பின்னும் அவர்கள் தங்களது பணிகளை மறந்து டிடெக்டீவ் ஏஜெண்டுகளாக செயல்படுவதில்தான் கண்ணும்,கருத்துமாய் செயல்படுகிறார்கள் இதன் பின்னும் இவரகளை ஜோடியாக வைத்திருப்பதில் உபயோகம் இல்லை என்பதை உணர்ந்து தற்போது அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை நாமே செய்ய ஆயத்தமானோம்..சில ஹப்புகள் நிறுவணத்திற்கு தெரியாமலே கலந்தாய்வு கூட்டம் நடத்துவது நாமே செய்வோம் என பேசுவது போன்ற ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு குந்தகம் விளைவித்தனர்.. உண்மையில் அவர்கள் தமக்கு தாமே குந்தகம் ஏற்படுத்தி கொண்டார்களே தவிர வேறு யாருக்குமில்லை..
தமிழ்கம் முழுவதும் உள்ள நிறுவண கொள்கைகளோடு ஒத்துப்போகும் கிளைகளை ஒருங்கிணைத்து தொழில் மிக விரைவாக நடத்தபடுகிறது எனவே இன்னுன் ஒரு சில மாதங்களில் நாம் எதிர்பார்த்து திட்டமிட்ட இலக்கை அடைவோம் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு வேலை இல்லை..

“திட்டமிடப்படுவது சிறிய இலக்கு அல்ல அது மிகப்பெரிய இலக்கு தொழில் நுட்பம்,பொருளாதாரம்,பல ஆயிரக்கணக்கான உயிர்களின் உழைப்பு,கனவு
மற்றும் நம்பிக்கை அது வெற்றி அடைந்தே தீரும்”

குக்கிராமங்களில் உள்ளவர்களையும் கூட மிகச்சிறந்த தொழில் அதிபராய் மாற்றுவதன் மூலம் இந்தியாவில் ,தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக மாற்றுவதை தவிர வேறு நோக்கம் இல்லை..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s